வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் அமைச்சர்களின் இலாகாக்கள் குறித்த பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். பின்னர் வருகிற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7ம் தேதி பதவியேற்றார். இதனைத் தொடர்த்து முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அமைச்சர்கள பதவி ஏற்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக லஷ்மிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்காவும் பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணகுமார் ஆகியோர் கடந்த மாதம் 27ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பாக என்.ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ள இலாகாக்கள் குறித்த பட்டியலை வழங்கினார். மேலும் பட்டியலுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்பு அமைச்சர்களுக்கு எந்தந்த இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரியவரும்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, வரும் 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 9,10, 11, 12ஆம் வகுப்பு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார். புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரி மூடப்பட்டன. இதனையடுத்து தற்போது புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து கல்விதுறை மற்றும் கல்வி நிறுவனங்களிடம் கருத்து கேட்டகப்பட்டது. இதனையடுத்து வரும் 16ம் தேதி புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com