list of fake educational institutions ugc release
fake universityx page

21 போலி பல்கலைக்கழகங்கள்.. UGC பட்டியல் வெளியீடு!

2025ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள 21 போலி பல்கலைக்கழகங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை UGC சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
Published on

நாட்டில் அங்கீகாரம் பெறாத போலியான கல்வி நிறுவனங்கள், கவா்ச்சியாக விளம்பரம் செய்து மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கி பட்டங்களை வழங்குகின்றன. இதனால், மாணவா்களின் முன்னேற்றமும், பெற்றோரின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை ஆணையம் அவ்வப்போது வெளியிடுகிறது.

list of fake educational institutions ugc release
பட்டியல்x page

அந்த வகையில், போலியான நிறுவனங்கள் யுஜிசி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பட்டியல் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேவையான சட்ட அங்கீகாரம் இல்லாமல் பட்டங்களை வழங்குவதற்காக இந்தப் பல்கலைக்கழகங்கள் கோடிடப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்க சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

list of fake educational institutions ugc release
பட்டியல்x page

ஆகையால் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது யுஜிசி வலைத்தளத்தைப் பார்த்து, தாங்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், போலி கல்வி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

list of fake educational institutions ugc release
அண்ணா பல்கலை.-இல் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் - 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com