புதுச்சேரியில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள்!!

புதுச்சேரியில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள்!!

புதுச்சேரியில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள்!!
Published on

(கோப்பு புகைப்படம்)

புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து நாடும் முழுவதும் பொது ஊரடங்கு அமலாக்கப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளை தவிர பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கை சில தளர்வுகளுடன் செயல்படுத்தலாம் என்றும் இது சம்பந்தமான முடிவுகளை மாநில அரசுகளே சூழ்நிலைகளுக்குகேற்ப எடுக்கலாம் என்றும் தெரிவித்தது. அந்தத் தளர்வுகளின் அடிப்படையில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் மதுபானக் கடைகளை திறந்தன.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக விற்பனையான மதுபானக் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்தக் கடைகளும் இன்று சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபானக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுபானங்களில் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com