கார்த்திக் சிதம்பரத்துடன் தொடர்பு..? சிக்குகிறார் இந்திராணி முகர்ஜி!
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளாகிய நிலையில், தற்போது லண்டன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுவரும் கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்படும் விதமாக நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்துவருகின்றன.
மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணியும், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை தமக்கு தெரியும் என்று இந்திராணி தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது போடப்பட்ட வழக்கு என்பது முதலீடுகள் தொடர்பானது என்றும், கூடுதல் தகவல் தெரியாது என்றும் இந்திராணி சமாளித்துள்ளார்.
இந்திராணியின் இந்த பேச்சு சிபிஐ விசாரணைக்கு மேலும் வலுக்கூட்டியுள்ளது. விரைவில் இந்திராணியை காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டம் வகுத்துள்ளதாக சிபிஐ அதிகரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கார்த்திக்க சிதம்பரம் எப்போது நாடு திரும்புவார் என்பது தொடர்பான அவரது குடும்பத்தாரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளனர். வரும் 29 ஆம் தேதி காலை கார்த்திக் சிதம்பரம் சென்னை திரும்புவார் என்று சிபிஐ அதிகாரிகள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அந்நிய நேரடி முதலீடுக்கான அனுமதியைப் பெற நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதில் நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைகள் கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.