பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை - கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை - கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
Picasa

புதுச்சேரி வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது  மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.

Picasa

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  மாணவியை  வில்லியனூர் பகுதியிலிருந்து பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அங்கிருந்து அவரை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவருக்கு வேற்றொருவர் உடன் பழக்கம் உள்ளதாக கூறி பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசி விட்டுத் தப்பி சென்றவரை வில்லியனூர் போலீசார் கைது செய்து போக்ஸோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கானது கடந்த இரண்டு வருடங்களாக புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  பிரதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com