\
Letter from 117 eminent India and Pak citizens to PM Modi, Sharif
ஷெபாஸ் ஷெரீப், மோடிஎக்ஸ் தளம்

’கொஞ்சம் ப்ளீஸ் கவனிங்க..’ | IND - PAK விவகாரத்தில் இரண்டு பிரதமர்களுக்கும் 117 பேர் கடிதம்!

அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான மையம் வெளியிட்ட இந்த வேண்டுகோளில், இந்தியாவைச் சேர்ந்த 61 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 56 பேரும் உட்பட 117 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
Published on

இரு நாடுகளுக்கும் இடையே அமைதி, பேச்சுவார்த்தை மற்றும் இயல்பான இருதரப்பு உறவுகளை மீட்டெடுப்பதற்கு உறுதியான, தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இருநாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணவம், பயங்கரவாதிகளின் 9 முகாம்களை அழித்தது. இதனால் இருதரப்பிலும் தாக்குதல் தொடர்ந்தது. பின்னர், தாக்குதல் நிறுத்தப்பட்டாலும் இருதரப்பு உறவில் இன்றுவரை விரிசல் நீடித்து வருகிறது. விசா சேவை நிறுத்தம், வான்வெளி மூடல், சிந்து நதி நீர் தடை என இருதரப்பிலும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்X

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி, பேச்சுவார்த்தை மற்றும் இயல்பான இருதரப்பு உறவுகளை மீட்டெடுப்பதற்கு உறுதியான, தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இருநாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான மையம் வெளியிட்ட இந்த வேண்டுகோளில், இந்தியாவைச் சேர்ந்த 61 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 56 பேரும் உட்பட 117 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது, நீண்டகாலமாக நீடித்துவரும் பகைமையை முடிவுக்குக் கொண்டுவருமாறு இரு அரசாங்கங்களையும் வலியுறுத்தியுள்ளதுடன், இந்தப் பகைமையானது மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு வாய்ப்புகளையும், செழிப்பையும், பாதுகாப்பான எதிர்காலத்தையும் மறுப்பதாகக் கூறியுள்ளது.

Jammu Kashmir Former CM Farooq Abdullah Survives Gun Attack
ஃபரூக் அப்துல்லாஎக்ஸ் தளம்

தேசிய மாநாட்டு தலைவர் ஃபரூக் அப்துல்லா, பிரிவினைவாத தலைவர் மிர்வைஸ் உமர் பரூக், பிடிபி தலைவர் மெகபூபா முஃப்தி, ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா மற்றும் முன்னாள் டிஎம்சி அமைச்சரும் தற்போதைய ஏஜேயுபி தலைவருமான ஹுமாயூன் கபீர் ஆகிய இந்திய தலைவர்களும், பாகிஸ்தான் தரப்பில் அதன் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி, முன்னாள் இராஜதந்திரி அஷ்ரஃப் ஜஹாங்கீர் காசி, தேசிய சட்டமன்ற உறுப்பினர் இஸ்பன்யார் பண்டாரா மற்றும் அணு இயற்பியலாளரும் எழுத்தாளருமான பர்வேஸ் ஹூட்பாய் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com