Odisha Train Tragedy | 1964 முதல் 2023 வரை... இந்தியாவை உலுக்கிய மோசமான ரயில் விபத்துக்கள்

இந்தியாவில் இதற்கு முன் நடைபெற்ற மோசமான ரயில் விபத்துகள் குறித்து இப்போது பார்க்கலாம்..
Train Accident
Train AccidentTwitter

* 1981ஆம் ஆண்டு பீகாரில் நடந்த ரயில் விபத்து இந்தியாவின் மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது. பாக்மதி ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு ஆற்றில் விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்தனர். 286 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டாலும் 800 பேர் வரை இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

* 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பின்னால் வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 358 பயணிகள் உயிரிழந்தனர்.

Train Accident
Train Accident

* 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் பிரம்மபுத்ரா மெயிலும் அவத் அசாம் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 300 பயணிகள் உயிரிழந்தனர்

* 1998ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பஞ்சாப்பில் நேரிட்ட விபத்தில் 212 பேர் இறந்தனர். தடம்புரண்டு நின்ற ரயில் மீது எகஸ்பிரஸ் ரயில் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது

* 1964இல் ராமேஸ்வரம் பகுதியில் வீசிய புயலால் பாம்பன் பாலம் அடித்துச்செல்லப்பட்டதில் அதன் மீது சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் கடலில் விழுந்து சுமார் 120 பேர் உயிரிழந்தனர்.

*தற்போது 2023-இல் ஒடிசாவில் நிகழ்ந்துள்ள ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைக்கும் விதத்தில் மோசமான விபத்தாக அமைந்துள்ளது. 240 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் 57 சதவீத விபத்துகள் ஊழியர்களின் கவனக்குறைவால் நேரிட்டவை என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com