இந்தியாவின் இரண்டாம் தலைநகராக பெங்களூரை ஆக்க வேண்டும்: பிரதமருக்கு கடிதம்
சமீப காலமாக டெல்லியின் காற்று மாசுபாடு உயர்ந்து கொண்டே வருகிறது. பனிமூட்டமாக இருந்த டெல்லி, புகை மூட்டமாக மாறியது. நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பியூட்டிபுஃல் காஷ்மீர் என்று பாடிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணனுக்கு கூட டெல்லி பிடிக்காமல் போய் விட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை தென் மாநிங்களில் நடத்துங்களேன் என்று அவையிலேயே பேசினார்.
அவருக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது கர்நாடக தொழில்துறை அமைச்சரின் கடிதம். பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் பரப்பளவு, மக்கள் தொகையை பார்க்கும் போது இரண்டாம் தலைநகரை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்கிறார் தேஷ்பாண்டே.
அதோடு, பெங்களூருவின் தட்பவெட்பநிலையும், இயற்கை பேரிடர்கள் பாதிப்புக்கு ஆளாகாத நிலை ஆகியவை இரண்டாவது தலைநகரை அமைக்க சாதகமான விஷயங்கள் என்று கூறியுள்ள அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடரை பெங்களூருவில் நடத்துவதோடு, உச்சநீதிமன்ற கிளையை அமைத்தால் வழக்குகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும் என்றும் தனது கடிதத்தில் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

