'மும்பை தாக்குதலை இந்து பயங்கரவாதமாக மாற்ற சதி'- முன்னாள் காவலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

'மும்பை தாக்குதலை இந்து பயங்கரவாதமாக மாற்ற சதி'- முன்னாள் காவலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
'மும்பை தாக்குதலை இந்து பயங்கரவாதமாக மாற்ற சதி'- முன்னாள் காவலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மும்பை தாக்குதலின்போது பயங்கரவாதிகள் தீட்டிய திட்டங்கள் குறித்து மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையர் ராகேஷ் மரியா அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார்.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மும்பை தாக்குதல் உலகத்தையே உலுக்கியது. கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், வெளிநாட்டினர் என 166 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார்.

இந்நிலையில் மும்பை தாக்குதலின்போது பயங்கரவாதிகள் தீட்டிய திட்டங்கள் குறித்து மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையர் ராகேஷ் மரியா அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார். 'let me say it now' என்ற அந்த புத்தகத்தில் மும்பை தாக்குதல் தொடர்பாக விரிவாக அவர் எழுதியிருக்கிறார்.

தாக்குதலில் கசாப் இறந்துவிட்டால் அவரது கழுத்தில் சமீர் தினேஷ் சவுத்ரி என்ற இந்து பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டையை தொங்கவிட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முடிவு செய்திருந்தனர் என்றும், அதில் ஹைதராபாத் கல்லூரியில் அவர் படித்து வருவதற்கான பொய்யான சான்றுகள் இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லவேளையாக கசாப் உயிருடன் பிடிபட்டதால் அந்த சதிச் செயலை பயங்கரவாதிகளால் அரங்கேற்ற முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கசாப் விசாரணையில் இருந்தபோது, தங்களது சதித் திட்டம் எங்கே அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில் கசாபை கொல்ல லஷ்கர் இ தொய்பாவும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் பல்வேறு முயற்சிகளை எடுத்ததாகவும் மரியா குறிப்பிட்டுள்ளார். அப்பாவி மக்களை கொன்ற கசாப்புக்கு 2012 ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com