சிவசேனாவுக்கு ’இந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப்’ குடியரசுத்தலைவர்தான் வேணுமாம்!
இந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கும் ஒருவர் அடுத்த குடியரசுத் தலைவர் ஆக வரவேண்டும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அடுத்த குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. குடியரசுத்தலைவர் பதவிக்கு மோகன் பகவத்தே சரியான தேர்வு என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத் விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், குடியரசுத்தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்று மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதனிடையே, வரும் ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்துத்துவா ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கும் ஒருவர் அடுத்த குடியரசுத் தலைவர் ஆக வரவேண்டும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் வெளியிட்டுள்ள கட்டுரையில், ராம ஜென்ம பூமி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது அரசியல் பிரிவு ஆகிய பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஹிந்து ராஷ்டிரா முத்திரை கொண்ட ஒருவர் தான் நாட்டிற்கு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.