இந்தியாவில் இன்றும் 1 லட்சத்துக்கு குறைவான தினசரி பாதிப்பு: 92,596 பேருக்கு கொரோனா

இந்தியாவில் இன்றும் 1 லட்சத்துக்கு குறைவான தினசரி பாதிப்பு: 92,596 பேருக்கு கொரோனா

இந்தியாவில் இன்றும் 1 லட்சத்துக்கு குறைவான தினசரி பாதிப்பு: 92,596 பேருக்கு கொரோனா
Published on

இந்தியாவில் ஒரேநாளில் 92,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாவது நாளாக ஒரு லட்சத்துக்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியிருக்கிறது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 596  ஆக குறைந்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 69 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 2,219 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 53 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 1 லட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 360 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com