இந்தியா
வாகன நடமாட்டம் இல்லாததால் சாலையில் படுத்துறங்கிய சிறுத்தை - வீடியோ
வாகன நடமாட்டம் இல்லாததால் சாலையில் படுத்துறங்கிய சிறுத்தை - வீடியோ
தேசிய நெடுஞ்சாலையில் படுத்து உறங்கிய சிறுத்தையைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்துள்ளது. ஆகவே வனப் பகுதிகளை ஒட்டியுள்ள சாலைகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் மிக இயல்பாக நடைபெற்று வருகிறது. ஆட்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் இந்த வனவிலங்குகள் படுத்து உறங்கி வருகின்றன.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்தில் உள்ள கோல்கொண்டா பகுதியில் உள்ள நூரனி மஸ்ஜித் என்ற மசூதிக்குள் civet ஒன்று மிகச் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைக் காண்ட மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். அதேபோல் ஹைதராபாத்தின் மைலர்தேவ்பள்ளி பகுதிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை ஒன்று படுத்து உறங்கியதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தப் பகுதியில் தென்பட்ட சிறுத்தை காயமடைந்திருப்பதைப் போல் தோன்றுகிறது என காவல்துறையினரும் ன அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இந்த நகரத்தைச் சேர்ந்த நேரு விலங்கியல் பூங்காவின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகச் செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. வெளியாகியுள்ள மற்றொரு அறிக்கையின்படி, அதை மீட்க அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோது சிறுத்தை தப்பியோடிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சிறுத்தை காலை 8.15 மணிக்குத் தென்பட்டதாக டி.சி.பி ஷம்ஷாபாத் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐக்கு பேசியுள்ளார்.