இந்தியா
ஏரியிலிருந்து திடீரென வெளியேறிய நச்சு நுரை: வாகன ஓட்டிகள் அவதி
ஏரியிலிருந்து திடீரென வெளியேறிய நச்சு நுரை: வாகன ஓட்டிகள் அவதி
பெங்களூருவில் உள்ள பெல்லாந்தூர் ஏரியில் இருந்து திடீரென நச்சு நுரை வெளியேறிதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் கடந்த 127 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஒரு சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பெங்களூரு பெல்லாந்தூர் ஏரியிலிருந்து நச்சுத்தன்மை கொண்ட நுரை அதிக அளவில் வெளியேறி சாலைப்பகுதிக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத இந்த ஏரியில் நச்சுப் பொருட்களும், கழிவுகளும் தேங்கியிருந்தது. திடீரென பெய்த மழையால், அந்த ஏரியிலிருந்து எமலூர் பாலம் உள்ள பகுதியில் அதிக அளவில் நச்சு நுரையும், வெள்ள நீரும் வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.