தெலங்கானா மாநிலத்தில் மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை, மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் மல்லாராம் வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த 4வயது சிறுத்தை ஒன்று ஊருக்குள் நுழைந்துள்ளது. இதைக்கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் அந்த சிறுத்தையை துரத்த முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை அந்த சிறுத்தை மின்கம்பத்தின் உச்சிக்கு சென்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.