“விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்குங்கள்” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை

“விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்குங்கள்” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை
“விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்குங்கள்” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை

விபச்சாரத் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வலியுறுத்தியுள்ளார். சூதாட்டம் மற்றும் பந்தயத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், ஹெக்டே இந்த கருத்தை முன் வைத்துள்ளார். 

இதுகுறித்து ஹெக்டே கூறுகையில், “சில தீமைகளை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. அதுபோன்ற தீமைகளை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் முறைகேடான வளர்ச்சிக்கு வழிவகுத்துவிடும். 

சட்டத்தின் மூலமாக மட்டுமே எல்லா விதமான தீமைகளையும் ஒழித்துவிட முடியும் என்று நினைப்பது, முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வது போன்றாகும். முற்றிலும் தடைவிதிக்கும் விவகாரங்களில் ஏற்கனவே எங்களுக்கு அனுபவம் இருந்தது. மது ஒழிப்பு விவகாரத்தில் பார்த்திருக்கிறோம்.

விபச்சாரம் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் விபச்சாரம் இருக்கிறது. விபச்சாரமும் தற்போது வழக்கமான தொழிலாக ஆக வேண்டும். விபச்சார தொழிலில் ஈடுபடுவோருக்கு லைசென்சு வழங்கப்பட வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com