சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வருகை
மகாராஷ்டிராவில் ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்னாவிஸை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், அஜித் பவார் அளித்த ஆதரவு கடிதமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபப்பட்டுள்ளது.
இதனிடையே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாக சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். மேலும், “ஆபரேஷன் கமலில் நான்கு பேர் உள்ளனர். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் போலீஸ் ஆகியோர் ஆபரேஷன் கமலை முன்னெடுக்கின்றனர். ஆனால் அது இங்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. உங்களிடம் பெரும்பான்மை இருந்தால், உங்களுக்கு ஏன் 'ஆபரேஷன் கமல்' தேவை?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகைக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சினர் வருகை புரிந்துள்ளனர்.