”விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது மத்திய அரசுக்கு தலைகுனிவு நிலை”- பி.ஆர்‌பாண்டியன்

”விவசாயிகள் மீது நடத்தப்படும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் உலக அளவில் மத்திய அரசுக்கு தலைகுனிவு நிலை ஏற்பட்டுள்ளது. என்ன செய்தாலும் விவசாயிகள் போராட்டத்தை நீர்த்து போக செய்ய முடியாது” - பி.ஆர்‌பாண்டியன்.
பி.ஆர்‌பாண்டியன்
பி.ஆர்‌பாண்டியன்PT

விவசாயிகளின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்‌பாண்டியன் கண்டனம்.

இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் பேசும் பொழுது,

”டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் சார்பற்ற நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள், அரசியல் கட்சிகள் இயக்குகிறார்கள் என்று கூறுகிறார்கள். இதனை ஏற்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தான் போராடுகிறார்கள்.

எம் எஸ் சுவாமிநாதன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்கிறார்கள்.

இந்த வாக்குறுதிகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதுதான். அவர்கள் செயல்படுத்துவதாக கூறியதுதான் தற்போது நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் போராடுகிறார்கள். போராடிவரும் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு போராட்டத்தை நீர்த்துப் போக செய்ய துப்பாக்கி சூடு நடத்துகிறது. லப்பர் குண்டுகளால் சுடுகிறது. ரசாயன புகை குண்டுகளை வீசுகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். உலகத்தில் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் சூழலை போல டெல்லியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. உயிரே போனாலும் விவசாயிகள் தொடர்ந்து போராடுவார்கள். விவசாயிகள் மீது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் உலக அளவில் தலை குனிவு நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com