சட்டங்கள் மூலம் மட்டும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாது: நிதீஷ்குமார்

சட்டங்கள் மூலம் மட்டும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாது: நிதீஷ்குமார்

சட்டங்கள் மூலம் மட்டும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாது: நிதீஷ்குமார்
Published on

"சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாது" என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டங்கள் குறித்த கேள்விக்கு, "ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் விரும்பியதைச் செய்ய சுதந்திரம் இருக்கிறது. சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மக்கள் தொகை கட்டுப்பாட்டை அடைய முடியாது என்பது எனது கருத்து. நமது பெரிய பொறுப்பு என்னவென்றால், பெண்கள் கல்வி கற்கும்போது, அவர்கள் விழிப்புணர்வு அடைகிறார்கள், இதன் விளைவாக கருவுறுதல் விகிதம் குறைகிறது" என்று நிதீஷ் குமார் கூறினார்.

மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த வரைவு மசோதா உத்தரப் பிரதேச சட்ட ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி, உத்தரப் பிரதேசத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடுவதற்கும், அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், அரசின் உதவிகளை பெறுவதற்கும் தடைவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, " கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிற அரசாங்க திட்டங்களுக்கும் மக்கள் தொகை விதிமுறைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் எஸ்சி-எஸ்டி சமூகத்திற்கு பொருந்தாது" என்று அறிவித்தார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த பிரச்னையும் விவாதிக்கப்படலாம் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com