''5 வருட சிறை தண்டனை; லவ் ஜிகாத்துக்கு எதிராக விரைவில் சட்டம்'' - மபி அமைச்சர்

''5 வருட சிறை தண்டனை; லவ் ஜிகாத்துக்கு எதிராக விரைவில் சட்டம்'' - மபி அமைச்சர்
''5 வருட சிறை தண்டனை; லவ் ஜிகாத்துக்கு எதிராக விரைவில் சட்டம்'' - மபி அமைச்சர்

கூடிய விரைவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய பிரதேச மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'லவ் ஜிகாத்' நடைமுறையில் இருப்பதைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வ ஏற்பாடுகளை தனது அரசு செய்யும் என்று மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நவம்பர் 2 ம் தேதி அறிவித்தார். மேலும், "காதல் பெயரில் ஜிகாத் செயல் இனி இருக்காது, அத்தகைய செயலை யார் செய்தாலும் அவர்கள் சரி செய்யப்படுவார்கள். இதற்காக சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றும் சவுகான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கூடிய விரைவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய பிரதேச மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த மபி மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அடுத்த சட்டமன்ற தொடரில் லவ் ஜிகாத்துக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படும். 5 வருட சிறைத்தண்டனையை உள்ளடக்கிய சட்டமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டமாகவும் இது இருக்கும் என தெரிவித்துள்ளார்

உபி, ஹரியானா, அசாம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் 'லவ் ஜிகாத்' நடைமுறைக்கு எதிரான சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com