இந்திய ராணுவத்தில் அதிவேக 'கர்கா' காமிகேஸ் ட்ரோன் அறிமுகம்.. அடேங்கப்பா இவ்ளோ சிறப்பம்சங்களா!!
இந்தியராணுவத்தின் கர்கா ட்ரோன்.
இந்தியப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது இந்திய இராணுவம். இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்பு பணிகளில் பெரும் பங்காற்றுதல் போன்ற பணிகளை இந்திய ராணுவம் மேற்கொள்கிறது. பாதுகாப்பு பணிகளின் போது நவீன மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கண்காணிப்பு கருவிகள் அவசியமானதாக இருக்கும். அதற்காக காலந்தோறும் இந்திய ராணுவத்தில் மாற்றங்கள் இருக்கும். அந்த வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை இந்திய ராணுவம் அறிமுகம் செய்துள்ளது. அதுதான் ’கர்கா' கமிகேஸ்.
’கர்கா' கமிகேஸ் என்பது இந்திய ராணுவத்தின் அதிவேக ட்ரோன். இந்த ட்ரோனை 'தற்கொலை' ஆளில்லா விமானம் என்று அழைக்கின்றனர். அதாவது எதிரி இலக்குகளை கண்டறிந்து இது எளிதில் அழிக்கக்கூடியது.
இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள 'கர்கா' காமிகேஸ் ட்ரோன் ஆனது, உளவுத்துறை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு ஏரோ சிஸ்டம் ஆகும்.
வேகம்! (speed)
கார்கி கேமிகேஸில் பயன்படுத்தப்படும் ட்ரோன் அதிவேக மற்றும் குறைந்த எடை கொண்ட வான்வழி வாகனம், வினாடிக்கு 40 மீட்டர் வேகம் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாங்கும் திறன்! (payload)
இந்த 'கர்கா' ட்ரோனானது 700 கிராம் வெடிமருந்துகளை எடுத்துச் செல்லக்கூடியது
அதிநவீன தொழில்நுட்பம்! (Navigation)
ஜிபிஎஸ், நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் உயர் வரையறை கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
counter jamming tech
எதிரியின் மின்காந்த நிறமாலை நெரிசலுக்கான எதிர் நடவடிக்கைகளும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வளவு தூரம் சென்று தாக்கும்? (Operational range)
இந்த ஆளில்லா விமானம் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. ஆனால் 'கர்கா' ரேடார் வரம்பிற்குள் வராது.
செலவு!
இதன் தயாரிப்புச் செலவு சுமார் 30,000 ரூபாய். ரஷ்யா - உக்ரைன் போரில் இத்தகைய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரேனியர்களால் வான்வழி வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட 'ஸ்வதேஷி' என்ற சக்திவாய்ந்த ட்ரோனானது ஆகஸ்ட் மாதம், நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரீஸ் (என்ஏஎல்) அறிமுகப்படுத்தப்பட்டது . இந்த ட்ரோனானது 1,000 கிலோ மீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்டபடி தயாரிக்கப்பட்டது.
முதன் முதலில் காமிகேஸ் என்ற தற்கொலை போர் விமானப்படை விமானமானது இரண்டாம் உலகப் போரின் முடிவில் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.