முதல்வர்கள் பழனிசாமியும் மம்தாவும் பறக்கவிட்ட கடைசி நேர சிக்ஸர்கள்!

முதல்வர்கள் பழனிசாமியும் மம்தாவும் பறக்கவிட்ட கடைசி நேர சிக்ஸர்கள்!

முதல்வர்கள் பழனிசாமியும் மம்தாவும் பறக்கவிட்ட கடைசி நேர சிக்ஸர்கள்!
Published on

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி இன்று பிற்பகல் 4.30 மணியளவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியானவுடனே முன்னதாக தமிழகம் மற்றும் மேற்கு வங்க அரசுகள் முக்கியமான அறிவிப்புகளை அவசர அவசரமாக வெளியிட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும் அரசு சார்பில் எந்தவொரு புதிய திட்டத்தையும் அறிவிக்கக் கூடாது என்பதால், தேதி அறிவிக்க சில மணி நேரங்களுக்கு முன்னரே புதிய அறிவிப்புகளை வெளியிட்டு கடைசி நேரத்தை தங்களுக்கான வாய்ப்பாக இந்த இரண்டு மாநில அரசுகளும் பயன்படுத்திக்கொண்டன.

அதன்படி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``மேற்கு வங்க நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம், மொத்தம் 56,500 தொழிலாளர்கள் வரை பயனடைவார்கள் என்று மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

I am pleased to announce a HIKE in the wages of daily wage workers under WB Urban Employment Scheme:

> To ₹202 per day from ₹144 earlier for unskilled labour

> To ₹303 from ₹172 earlier for semi-skilled

> ₹404 for skilled labour (new category introduced)

(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) February 26, 2021

அதேபோல, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் 6 சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் மற்றும் ஏழைகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன உள்ளிட்டவை முதல்வர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

``கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதில் சிக்கி தவிக்கின்றனர். பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீளவில்லை; இதன்காரணமாக ஏழை எளிய, விவசாய தொழிலாளர்களின் துயரத்தில் கருத்தில்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என இந்த நடவடிக்கையை தமிழக அரசு நியாயப்படுத்தியிருக்கிறது.

முன்னதாக, தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வண்ணம் ரூ.12,110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இதற்காக சுமார் ரூ.5,000 கோடி இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com