ரூ.2000 தாள்களை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு! அக்.7 கடைசி நாள்!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள இன்றுடன் கெடு முடிவடைய இருந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள இன்றுடன் கெடு முடிவடைய இருந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இனியும் தாமதமின்றி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டாலும் சட்டரீதியாக புழக்கத்தில் இருக்கும் என்றும், இதுவரை சுமார் 96 சதவிகிதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. மேலும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் (இன்றுவரை), பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக்கொள்ள அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com