\
“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல்

“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல்

“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல்
Published on

பீகார் காவல்துறை தகவலின்படி கடந்த 15 நாட்களில் பீகாரில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 

பீகார் மாநிலத்தில் சமீப காலங்களாக கும்பல் வன்முறை அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக பீகார் காவல்துறையும் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாட்னா ஏடிஜிபி, “பாட்னா காவல்துறையினரின் சார்பில் ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதில் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் தங்களின் கைகளில் சட்டத்தை எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com