மணிப்பூர் கலவரம்: பாஜக அலுவலகம் அருகே ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு!

மணிப்பூரில் பாஜக அலுவலகம் அருகே கூடியிருந்த கூட்டத்தை கலைக்க காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் குகி மற்றும் நாகா பழங்குடி பிரிவினருக்கும் இடையே சுமார் இரண்டு மாதங்களாக கலவரம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இம்பாலில் உள்ள பாஜகவின் மாநில அலுவலகம் அருகே நேற்று மாலை ஏராளமானோர் திரண்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் கட்டுப்பாட்டை மீறி பாஜக அலுவலகம் நோக்கிச் சென்றனர்.

Manipur BJP Office
Manipur BJP Office@ANI | Twitter

இதனால் காவல் துறையினர் பலமுறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கூட்டம் கலைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பாஜக அலுவலகத்தைச் சுற்றி காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com