விமானப் பயணங்களில் லேப்டாப் கொண்டு செல்ல விரைவில் தடை

விமானப் பயணங்களில் லேப்டாப் கொண்டு செல்ல விரைவில் தடை

விமானப் பயணங்களில் லேப்டாப் கொண்டு செல்ல விரைவில் தடை
Published on

பாதுகாப்பு நலன் கருதி விமானப் பயணங்களின் போது லேப்டாப்-ஐ கொண்டு செல்ல தடை விதிக்க சர்வதேச விமானப் போக்குவரத்து கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

லேப்டாப் போன்ற பெரிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை, பயணிகள் பையில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்க சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் லேப்டாப் போன்ற பொருட்களை பயணிகள் கொண்டு செல்லும்போது, தீ விபத்து ஏற்பட்டு, அதன்மூலம் பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது. பயணிகளின் பைகளிலோ அல்லது வழியனுப்ப வந்தவர்களின் பைகளிலோ புகை வெளியேறுவதைக் கண்டால் அவை லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களால் ஏற்படக்கூடியை என்றும், அவற்றை உடனடியாக அணைக்க விமானப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது. கடந்த வாரம் டெல்லி இந்தூர் விமான நிலையத்தில் பயணி ஒருவரின் செல்போன் வெடித்தபோது, அதை உடனே அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் விமானப்பயணிகள் செல்போன்களுக்கு சார்ஜ் போடும் பவர்கள் பேங்குகள், லேப்டாப் ஜார்ஜர்கள், இ-சிகரெட்ஸ் போன்றவற்றை கொண்டு செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் ஏதேனும் ஒன்று லேப்டாப் போன்ற பெரிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்தால், அது இந்திய விமானத்துறையிலும் நடைமுறைப்படுத்தப்படும். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர் ஒருவர், ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com