'சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க ராகுல்' - அன்புக் கட்டளையிட்ட லாலு பிரசாத் யாதவ்

பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு சென்ற ராகுல் காந்தியிடம், விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பலரும் வருத்தங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தும் ராகுல் காந்திக்கு திருமணம் தொடர்பாக அன்பு கட்டளையிட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது அவர் லாலு பிரசாத் யாதவை அழைத்து பேசிய போது, ராகுலிடம் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பாசத்துடன் லாலு கேட்டிருக்கிறார். அத்துடன் நான் கூறிய அறிவுரையை நீங்கள் முன்பே கேட்கவில்லை என்று கடிந்து கொண்டதுடன், இன்னும் தாமதமாகவில்லை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுலிடம் லாலு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com