\
லாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை

லாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை

லாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மகன் தேஜஸ்வி கவலை
Published on

லாலு பிரசாத் யாதவிற்கு ஆரோக்கிய பிரச்னைகள் அதிகரித்து வருவது கவலை தருவதாக அவர் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

கால்நடைத் தீவன வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு, தற்போது சிகிச்சைக்காக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக மும்பை ஆசியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் லாலுவை நேரில் சென்று பார்த்த அவரது மகன் தேஜஸ்வி, டுவிட்டரில் கவலையை பதிவிட்டுள்ளார். அதில், உடல் ரீதியான பல்வேறு கோளாறுகள் தனது தந்தைக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் கிருமித் தொற்றாலும் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தேஜஸ்வி கூறியுள்ளார். சிறப்பு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை தந்து வருவதாகவும், சிக்கல்களில் இருந்து தனது தந்தை மீள பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com