\
லாலு பிரசாத்துக்கு சிறை: அதிர்ச்சியில் சகோதரி மரணம்!

லாலு பிரசாத்துக்கு சிறை: அதிர்ச்சியில் சகோதரி மரணம்!

லாலு பிரசாத்துக்கு சிறை: அதிர்ச்சியில் சகோதரி மரணம்!
Published on

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து, அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி மரணமடைந்துள்ளார்.
 
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத்துக்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் லாலு பிரசாத்தின், ஒரே சகோதரியான கங்கோத்ரி தேவி (73) நேற்று திடீரென மரணம் அடைந்தார். 
இதுபற்றி லாலு பிரசாத்தின் மனைவியும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி கூறும்போது, ‘இந்த வழக்கில் இருந்து தம்பி விடுதலையாக வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்துவந்தார். ஆனால், தண்டனை அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியில் இறந்துவிட்டார்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து லாலு பிரசாத் பரோலில் வருவார் என்று கூறப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com