பீகாரில் மாற்றத்துக்கு வித்திட்ட சிபிஐ வழக்கு: ராஜினாமாவில் முடிந்த மோதல்
ரயில்வே கேட்டரிங் ஒப்பந்தம் வழங்குவதில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சிபிஐ அண்மையில் வழக்குத் தொடர்ந்தது.
இதுவே பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணி ஆட்சியில் முதல் விரிசலுக்கு காரணமாக அமைந்தது. ஊழல் கரை படிந்த தேஜஸ்வி துணை முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் நெருக்கடி தந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நிதிஷை முதல்வராக்கியதே தான்தான், தாங்கள் குற்றமற்றவர்கள், தேஜஸ்வி ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் லாலு திட்டவட்டமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை நிதிஷ் ராஜினாமா செய்துள்ளார்.
2009 ஆம் ஆண்டிலிருந்தே நிதிஷ் மீது கொலை வழக்கு இருப்பதாகவும் அவர் மட்டும் எப்படி முதலமைச்சராக இருந்தார் என்றும் லாலு பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.