இந்தியா
ஊழல் வழக்கில் ஆஜராக அவகாசம் கேட்டு லாலு கோரிக்கை..
ஊழல் வழக்கில் ஆஜராக அவகாசம் கேட்டு லாலு கோரிக்கை..
ஊழல் வழக்கில் நேரில் ஆஜராக அவகாசம் அளிக்குமாறு சிபிஐக்கு லாலு பிரசாத்தும், அவரது மகன் தேஜஸ்வியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐஆர்சிடிசி சார்பில் இயக்கப்படும் இரு உணவகங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதில் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி ஆகிய இருவரும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் லாலு பிரசாத் நாளை மறுதினமும், தேஜஸ்வி வரும் 6ஆம் தேதியன்றும் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.