ஜிஎஸ்டியில் நாப்கினுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சானிடரி நாப்கினை பெண்கள் அனுப்பியுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி-யில் நாப்கினுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. நாப்கின் பெண்களின் மாதாந்திர தேவை என்பதால் அதற்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாப்கினுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க பல்வேறு தரப்பிடம் இருந்து வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நாப்கினுக்கான ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சானிடரி நாப்கின்களை பெண்கள் அனுப்பியுள்ளனர். இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த பெண்கள், கேரள இடதுசாரி மாணவர் அமைப்பினர் அஞ்சல் மூலமாக அருண் ஜேட்லிக்கு அனுப்பியுள்ள நாப்கினில் “ப்ளீடு வித் அவுட் டேக்ஸ்” (bleed without tax) என எழுதப்பட்டுள்ளது.