லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

லடாக்கின் துர்டுக் செக்டார் பகுதியில் நடந்த வாகன விபத்தில் இதுவரை 7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 26 ராணுவ வீரர்கள் கொண்ட குழு, பர்தாபூரில் உள்ள போக்குவரத்து முகாமில் இருந்து ஹனிஃபில் உள்ள ஒரு துணை முகாமிற்கு வாகனத்தில் சென்றனர். தோயிஸிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் காலை 9 மணியளவில், வாகனம் சறுக்கி, சுமார் 60 அடி ஆழம் கொண்ட ஷியோக் ஆற்றில் விழுந்தது, இதன் விளைவாக 7 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த பலர் பர்தாபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களை Western Command தளத்திற்கு மாற்ற இந்திய விமானப்படையிடம் இருந்து விமான உதவி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com