டெல்லியில் ஜெயப்பிரகாஷ் அரசு மருத்துவமனையில் உள்ள கழிவு நீர் தொட்டியில் அடைப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
டெல்லியின் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் இன்று காலை கழிவு நீர் தொட்டியில் அடைப்பை நீக்கும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென விஷ வாயு தாக்கியதில் ரிஷிபால் என்ற 48 வயது தொழிலாளி இறந்தார். மேலும் 3 தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.