மாநிலங்களவை உறுப்பினர்களாகும் எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ், ஜெ.பி.நட்டா!

மக்களவைத் தொகுதியில் நீலகிரியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், மாநிலங்களவையின் உறுப்பினராகிறார் எல். முருகன்.
எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ், ஜெ.பி.நட்டா!
எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ், ஜெ.பி.நட்டா!புதிய தலைமுறை

மாநிலங்களவை தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய இணை அமைச்சராகவும் இருக்கக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் எல்.முருகன், இம்முறை மீண்டும் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவதாக அகில இந்திய பாஜக தலைமை தெரிவித்துள்ளது.

இம்முறையும் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகி இருக்கிறார். இதன் மூலம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நேரடியாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஆற்ற இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அகில இந்திய பாஜக தலைமை நேரடியாக வழங்கி இருக்கிறது.

இதுகுறித்து அவர் நம்மிடையே பேசிய பொழுது, “தமிழ்நாட்டில் இருந்து 40 தொகுதிகளும் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு வருவார்கள்” என்று கூறியுள்ளார். இதேபோல குஜராத்திலிருந்து ஜெ.பி.நட்டா எம்.பி.யாகிறார். மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து எம்.பி.யாகிறார். ஜெ.பி.நட்டாவின் பாஜக தேசிய தலைவர் என்ற பதவி மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com