பல பெண்களை மோசடி செய்த கன்னியாகுமரி இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்...!

பல பெண்களை மோசடி செய்த கன்னியாகுமரி இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்...!
பல பெண்களை மோசடி செய்த கன்னியாகுமரி இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்...!

பெண்களை மோசடி செய்த கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்ற இளைஞரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசப்புரம் பகுதியை சேர்ந்தவர் காசி (26). இவர் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் காதலிப்பது போல் நடித்து பணம் பறித்து, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ள காசி மீது, மேலும் ஒரு பெண் நேசமனி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி இவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், காசியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீசாருக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். காசி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் போலீசார் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, காசி வசித்து வந்த வீடு பொதுசாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சாலை பகுதியை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் காசியின் தந்தை தங்கபாண்டியன் பெயரில் அமைந்து இருக்கும் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

அப்போது பொது இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டு இருப்பதும், வீடு கட்டும் போது பெற்ற அனுமதிக்கு மாறாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், வீட்டை ஜப்தி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com