ஹரித்துவார் கும்பமேளா: கடந்த 5 நாட்களில் 2167 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ஹரித்துவார் கும்பமேளா: கடந்த 5 நாட்களில் 2167 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
ஹரித்துவார் கும்பமேளா: கடந்த 5 நாட்களில் 2167 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த ஏப்ரல் 10 முதல் 14 வரை பக்தர்களிடம் எடுக்கபட்ட சோதனையில் 2167பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரில் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கும்ப மேளாவில் புனித நீராடினர். இதற்கிடையில் கும்பமேளாவில் கடந்த ஏப்ரல் 10 முதல் 14 வரை பக்தர்களிடம் எடுக்கபட்ட சோதனையில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கங்கை ஆற்றில் புனித நீராடலுக்கு உகந்த நாளான நேற்று ‘ஹர் கி பைரி’ என்ற படித்துறையில், பல்லக்கில் எடுத்து வரப்பட்ட சாமி சிலைகளுடன் துறவிகள் புனித நீராடினர். பக்தர்கள் வேறு படித்துறைகளில் நீராடினர். 

நேற்று ஒரே நாளில் சுமார் 10 லட்சம் பேர் புனித நீராடியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு நடனமாடினர். அப்போது பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை, தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இந்த நிலையில் ஹரித்துவாரில் கடந்த 5 நாட்களில் 1701 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே சுமார் 48 லட்சம் பேர் திரண்டதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com