ராமர் கோயில் - பிராண பிரதிஷ்டை எப்போது?

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், விழாவில் பங்கேற்க எட்டாயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
ராமர் கோயில்
ராமர் கோயில்புதிய தலைமுறை

ராமர் கோயில் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள எட்டாயிரம் பேரும், காலை 10 மணியளவில் கோயில் வளாகத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, டெல்லியில் இருந்து புறப்படும் நரேந்திர மோடி காலை 10.25 மணிக்கு அயோத்தி விமான நிலையத்தை வந்தடைகிறார்.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் பயணிக்கும் அவர், காலை 10.55 மணிக்கு ராமர் கோயில் வளாகத்தை அடைகிறார். மேலும் காலை 11 மணி முதல் நண்பகல் 12 வரை, ராமர் கோயில் வளாகத்தில் பிரதமர் தியானம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில்
Fact Check: உண்மையில் ராமர் பிரதிஷ்டை சிறப்பு பூஜைக்கு மறுப்பு வழங்கப்பட்டதா? நடந்தது என்ன?

நண்பகல் 12.05 மணி முதல் 12.55 மணி வரை, பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது புதிதாக நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையின் கண்கள் திறந்து வைக்கப்படும். அந்த நேரம், கோயில் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை, அயோத்தியில் நடைபெறும் பொதுநிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். பிற்பகல் 2.10 மணிக்கு குபேர் திலா பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அயோத்தியில் இருந்து பிரதமர் மோடி புறப்படுகிறார்.

ராமர் கோயில்
அயோத்தியா ராமர் கோவில் கட்டட சிறப்புகள் என்னென்ன? சிலையை வடிவமைத்தவர் யார்?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com