கர்நாடக முதலமைச்சரானார் குமாரசாமி : துணை முதலமைச்சரும் பதவியேற்பு

கர்நாடக முதலமைச்சரானார் குமாரசாமி : துணை முதலமைச்சரும் பதவியேற்பு

கர்நாடக முதலமைச்சரானார் குமாரசாமி : துணை முதலமைச்சரும் பதவியேற்பு
Published on

கர்நாடக முதலமைச்சராக மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். 

கர்நாடகத்தில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிக்கு தேர்தல் நடைப்பெற்றது. பாஜகவுக்கு 104 இடங்களிலும், காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும்‌ ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரினர். பாஜவை சேர்ந்த முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையடுத்து, எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார். பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்த நிலையில், அடுத்த நாளே பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த நாள் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் 117 எம்எல்ஏக்களை கொண்ட குமாரசாமியை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். மே 21ஆம் தேதி ஆட்சியமைப்பதாக இருந்தது. இருப்பினும் அன்றைய தினம் ராஜூவ் காந்தி நினைவு நாள் என்பதால், பதவியேற்பு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்படி இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கர்நாடக ஆளூநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்க, குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் கர்நாடகாவின் 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றுள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்ச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி, தேவகவுடா, மல்லிகார்ஜூனா கார்கே, சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com