குல்பூஷண் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற கெடு இன்றுடன் நிறைவு
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவ் குறித்த வாதத்தை இந்தியா முன் வைப்பதற்காக, சர்வதேச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாகக் கூறி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அத்துடன் அவரை சந்திப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தூதரக முயற்சிகளுக்கும் பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதி மறுத்தது.
இதையடுத்து இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றவும் இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன் இது தொடர்பான வாதத்தை முன் வைக்கும்படி இந்தியாவுக்கும் கெடு விதித்திருந்தது. இந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், விசாரணையின் போது இந்தியா சார்பில் எழுத்துப்பூர்வமான வாதம் முன் வைக்கப்படவுள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து இந்திய வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் வி.டி.சர்மா நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.