“மணிப்பூரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும்” - குக்கி சமூக மக்கள் பேரணி

மணிப்பூரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி, குக்கி சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர்.
Manipur
Manipurfile

மணிப்பூரின் சுராசந்த்பூரில் நடைபெற்ற பேரணியில் குக்கி சமூக மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த, அரசியல் தீர்வுக்கான செயல் முறைகளை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் விரைவுபடுத்த வேண்டும் என பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

Manipur Violence
Manipur ViolenceTwitter

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல், மெய்தி-குக்கி இன மக்களுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Manipur
உ.பி.|திருமணம் செய்வதற்காக ஒரேநாளில் நண்பனை பெண்ணாக மாற்றி அறுவைச்சிகிச்சை; காதலால் வந்த விபரீத ஆசை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com