’டெர்மினேட்டர்’ கே.பி.எஸ்.கில் மரணம்

’டெர்மினேட்டர்’ கே.பி.எஸ்.கில் மரணம்

’டெர்மினேட்டர்’ கே.பி.எஸ்.கில் மரணம்
Published on

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் இயக்கத்தின் வன்முறையை ஒழித்த, அம்மாநில முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ் கில் மறைவுக்கு பிரதரம் மோடி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கில்லுக்கு வயது 82. சூப்பர் காப் என்று அழைக்கப்படும் கில், பஞ்சாப்பில் தலைவிரித்தாடிய காலிஸ்தான் இயக்கத்தின் வன்முறையை ஒடுக்கி, மாநிலத்தை அமைதி பூங்காவாக மாற்றிய பெருமைக்குரியவர். இதனால் டெர்மினேட்டர் என்று இவரை அழைத்தனர். டி.ஜி.பி. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், பஞ்சாப் அரசுக்கு ஆலோசனை தெரிவித்து வந்தவர். அவர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மினி டைரி:

1958-1984: அஸ்சாமில் போலீஸ் அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு ஐஜி, டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ’சூப்பர் காப்’ என பெயர் பெற்றார்.

1984-95: சொந்த மாநிலமான பஞ்சாப் வந்தார். இரண்டு முறை டிஜிபியாக பதவி வகித்தார்.

1988: பொற்கோயிலில் நுழைந்த தீவிரவாதிகளை வேட்டையாடினார்.

1989: காலிஸ்தான் தீவிரவாதிகளை அடியோடு ஒழித்தார். மனித உரிமைகளை மீறினார் என்று இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
2000: இலங்கை அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராட இவரது ஆலோசனையை கேட்டது.

2002: கோத்ரா வன்முறை சம்பவத்தின்போது குஜராத் மாநில பாதுகாப்பு ஆலோசகராக இவரை நியமித்தார் அப்போதைய அம்மாநில முதல்வர் மோடி.

2006: சத்தீஷ்கரில் நக்சலைட்டுகளை ஒழிக்க பாதுகாப்பு ஆலோசகராக அம்மாநில அரசு நியமித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com