கோழிக்கோடு விமான ஓடுபாதை பாதுகாப்பற்றது : 9 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த நிபுணர்!

கோழிக்கோடு விமான ஓடுபாதை பாதுகாப்பற்றது : 9 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த நிபுணர்!
கோழிக்கோடு விமான ஓடுபாதை பாதுகாப்பற்றது : 9 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த நிபுணர்!

நேற்று துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 17பேர் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்துவரும் நிலையில், “கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றது. குறிப்பாக ஈரமான சூழலில் இங்கு விமானங்கள் தரையிறக்கக்கூடாது” என்று விமான பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் கேப்டன் மோகன் ரங்கநாதன் 9 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவரின் எச்சரிக்கையை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

”ஏற்கனவே நடந்த மங்களூரு விபத்துக்குப் பிறகு  வழங்கப்பட்ட எனது எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. இது ஒரு டேபிள்டாப் ஓடுபாதையாகும். ஓடுபாதையின் முடிவில் உள்ள இடையக மண்டலம் போதுமானதாக இல்லை. விமான நிலையம் ஓடுபாதையின் முடிவில் 240 மீட்டர் இருக்கவேண்டும். ஆனால், அது 90 மீட்டர் மட்டுமே இருக்கிறது. மேலும், ஓடுபாதையின் இருபுறமும் இடைவெளி கட்டாயமாக 100 மீட்டர் இருகக்வேண்டும். ஆனால், 75 மீட்டர் மட்டுமே உள்ளது” என்று ரங்கநாதன் கூறியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, அவர் விமான பாதுகாப்பு ஆலோசனைக் குழு தலைவருக்கு எழுதியுள்ளக் கடிதத்தில் “ஓடுபாதை இறுதி பாதுகாப்பு பகுதி மற்றும் ஓடுபாதையின் முடிவிற்கு அப்பால் உள்ள இடம் நிலப்பரப்பாக இல்லை.   செயல்பாடுகள் பாதுகாப்பாக இருக்க ஓடுபாதையின் நீளத்தை குறைக்க வேண்டும்” என்று பல்வேறு எச்சரிக்கைகளை அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com