விபத்துகளுக்கு பேர்போன கோழிக்கோடு ”டேபிள்டாப்” விமான நிலையம் - நடந்த விபத்துகள் என்ன?

விபத்துகளுக்கு பேர்போன கோழிக்கோடு ”டேபிள்டாப்” விமான நிலையம் - நடந்த விபத்துகள் என்ன?
விபத்துகளுக்கு பேர்போன கோழிக்கோடு ”டேபிள்டாப்” விமான நிலையம் -  நடந்த விபத்துகள் என்ன?

கோழிக்கோட்டில் அமைக்கப்பட்டுள்ள டேபிள்டாப் எனப்படும் விமான ஓடுதளத்தில் பல விபத்துக்கள் நடந்துள்ளன.

துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி இராண்டாக உடைந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியானது. முதற்கட்ட தகவல் அறிக்கையில் விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து நடந்ததற்கு விமானம் தரையிரங்கிய ஓடுதளமான “டேபிள் டாப்” தளம்தான் காரணமென்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டேபிள் டாப் விமான ஓடுதளமானது மலைக்குன்றுகளின் மீதோ அல்லது உயரமான இடத்தில் இருக்கும் விமான தளமாகும். இந்த விமான தளமானது பருவ நிலை மாறுபடும் காலங்களில், விமானிகள் விமானங்களைத் தரையிறக்குவதற்கு  கடினமான சூழ்நிலையை கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த விமான தளத்தின் இரு முனைகளும் செங்குத்தானவை. பொதுவாக அழகுக்காக வடிவமைக்கப்படுவதாகச் சொல்லப்படும் இம்மாதிரியான விமான ஓடுதளங்களில் விமானத்தை தரையிறக்கும் விமானிக்கு மிக மிக நேர்த்தியான அணுகு முறை தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் மங்களூருவில் நடந்த விபத்துக்கு காரணம் டேபிள் டாப் விமான ஓடுதளம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்துகளையும், அதற்கு காரணமாக கூறப்பட்டதையும் பார்க்கலாம்.

நவம்பர் 7 2008 - ஜெட்டாவிலிருந்து வந்த ஏர் இந்தியா ஏர் பஸ் 310 என்ற விமானம் தரையிறங்கும் போது, அதன் வலது இறக்கை விமான ஓடுதளத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

9 ஜீலை 2012 - ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் போயிங் 737 -800 என்ற விமானம் தரையிறங்கும் போது, அப்போது பெய்த மழையின் காரணமாக தடுமாறியது.  ஆனால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

10 ஜுன் 2015 ஆம் ஆண்டு நடந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

25 ஏப்ரல் 2017 : ஏர் இந்தியா இந்தியா A321 -200 என்ற விமானம் புறப்படத் தயாரனபோது அதன் இடது பக்க டயரானது வெடித்தது.

4 ஆகஸ்ட் 2017 ஜெட் விமானம் ஒன்று தரையிரங்கும் போது, நிலையத்தில் இருந்த எச்சரிக்கை குறிப்புகளால் தடுமாறி சேதமானது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com