\
பாடிக்கொண்டிருந்தபோது மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த பாடகர்!

பாடிக்கொண்டிருந்தபோது மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த பாடகர்!

பாடிக்கொண்டிருந்தபோது மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த பாடகர்!
Published on: 

இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தபோதே, பாடகர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கொங்கனி இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் ஜெர்ரி பஜ்ஜோடி (Jerry Bajjodi). கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த இவர், இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு மங்களூரில் உள்ள பேஜாய் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். பிரபல கன்னட பாடல் ஒன்றை அவர் பாடிக் கொண்டிருந்த போது திடீரென்று அப்படியே முன் பக்கமாக சாய்ந்தார்.

உடனடியாக, அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே இசைக் கலைஞர் ஒருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெர்ரி மேடையில் பாடியபடி சரிந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com