\
கொல்கத்தா குற்றம்
கொல்கத்தா குற்றம்கோப்பு படம்

‘வெளியே சொன்னால் அவ்வளவுதான்’ - காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த சிறுமி! திடுக்கிடும் சம்பவம்

மேற்கு வங்க மாநிலத்தில் 14 வயது சிறுமியும் அவரது காதலனும் சேர்ந்து சிறுமியின் தாயைக் கொலை செய்து நாடகமாடியுள்ளது அம்பலமாகியுள்ளது.
Published on

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் தன் கணவன் மற்றும் 14 வயது மகளுடன் பெஹாலா பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த ஜூன் 6ம் தேதி திடீரென உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தனது மனைவி உயிரிழந்ததும் கடும் மன உளைச்சளில் இருந்த சிறுமியின் தந்தை கடந்த சனிக்கிழமை தனது மனைவியின் இறப்பு குறித்து அண்டை வீடு நபர் ஒருவரிடம் பேசியுள்ளார். அப்போது தனது மனைவியின் இறப்பு இயற்கையானது அல்ல எனவும் தனது மகள் தான் அவரைக் கொன்றுவிட்டார் எனவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா குற்றம்
கொல்கத்தா குற்றம்கோப்பு படம்

உடனே விரைந்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 14 வயதான சிறுமியும் அவரது காதலான மற்றொரு சிறுவனும் சேர்ந்து அவரது தாயைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க பெஹாலா பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் அவரது மரணம் இயற்கையானது தான் என்று சான்றிதழ் வாங்கி அந்தத் தாயை அடக்கமும் செய்துள்ளனர்.

அத்தோடு நில்லாமல் சிறுமியின் தந்தை இது குறித்து வெளியே சொன்னால் அவரையும் எதாவது செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன தந்தை இரண்டு மாதங்களாக யாரிடமும் இது குறித்து சொல்லாமல் இருந்துள்ளார்.

பின்னர் போலீசார் சிறுமியையும் அவரது காதலனையும் பிடித்து விசாரிக்கவே அவர்களும் கொலை செய்தது தாங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இருவரும் இன்று சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் கொலையின் காரணம், எப்படி கொலை செய்தார்கள், மருத்துவரின் பங்கு என்ன?, என்பன போன்ற விசயங்கள் விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

14 வயதேயான சிறு பெற்ற தாயையே கொலை செய்து அதை வெளியே சொன்னால் தந்தையையும் கொன்றுவிடுவேன் என மிரட்டி 2 மாதங்களாக நாடகமாடி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com