\
Kolkata Dog Cruelty: Man Kills Ex-Partner's Two Pet Dogs
Kolkata Man Arrested for Killing Ex-Girlfriend's Two Pet Dogs Over BreakupInstagram

முன்னாள் காதலியின் 2 வளர்ப்பு நாய்களைக் கொ*ற நபர்; வீடியோ காலில் கொடூரத்தைக் காட்டிய அதிர்ச்சி!

லிவ்-இன் உறவில் இருந்த காதலி பிரிந்து சென்றதால், அவர் வளர்த்து வந்த இரண்டு நாய்களைக் கொன்று, அதை வீடியோ அழைப்பில் காட்டிய நபர்! காதல் முறிவால் இரண்டு வளர்ப்பு நாய்களைக் கொடூரமாகக் கொன்றதன் பின்னணி குறித்து பார்க்கலாம்.
Published on: 

செய்தியாளர் : துர்கா தேவி சரவணன்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், காதல் முறிவால் ஏற்பட்ட ஆத்திரத்தில் முன்னாள் காதலியின் 2 வளர்ப்பு நாய்களைக் கொடூரமாகக் கொன்ற நபர், அந்தச் சம்பவத்தை வீடியோ கால் மூலம் அவருக்குக் காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், அந்தப் பெண் தன்னைத் தொடர்ந்து உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kolkata Dog Cruelty: Man Kills Ex-Partner's Two Pet Dogs
Kolkata Dog Cruelty: Man Kills Ex-Partner's Two Pet DogsAI

கொல்கத்தாவின் விஜய்கர்-பிக்ரம்கர் பகுதியில் சஞ்சிப் பட்டாச்சார்யா (Sanjib Bhattacharya) என்பவரும், டிஜே பாரிநோவா (DJ Parinova) என்ற பெண்ணும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் மற்றும் தகராறுகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறியதுடன், தனது 2 வளர்ப்பு நாய்களையும் சஞ்சிப்பின் பராமரிப்பில் விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சஞ்சிப் தனது முன்னாள் காதலியான பாரிநோவாவிற்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது, அவரது வளர்ப்பு நாய்களில் ஒன்று கயிற்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தொடர்புகொண்டு வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, 2 நாய்களும் உயிரிழந்து கிடந்தன. வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்ததுடன், அங்கு செங்கற்களின் துண்டுகளும் ஆயுதங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மற்ற விலங்குகளைக் கொல்வதற்காக சஞ்சிப் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்ததாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நடிகையும் விலங்கு உரிமைகள் ஆர்வலருமான டெப்லினா தத்தா உள்ளிட்ட பல்வேறு விலங்கு நல அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு உயிரிழந்த 2 நாய்களின் உடல்களையும் மீட்டதுடன், வீட்டிற்குள் சிக்கியிருந்த மேலும் சில விலங்குகளையும் கண்டறிந்தனர்.

Kolkata Dog Cruelty: Man Kills Ex-Partner's Two Pet Dogs
Kolkata Dog Cruelty: Man Kills Ex-Partner's Two Pet DogsInstagram

நாய்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகராட்சி விவகாரங்கள் துறை அமைச்சர் அக்னிமித்ரா பாலை, டெப்லினா தத்தா தொடர்புகொண்டார்.

மேலும், ஒரு குட்டி நாயின் தலையைச் செங்கல்லால் நசுக்கிக் கொன்றதாகவும் டெப்லினா தத்தா குற்றம்சாட்டினார். நாய்கள் செங்கல்லால் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த நாய்களில் ஒன்று உள்ளூர் இனத்தைச் சேர்ந்தது என்றும், மற்றொன்று பீகிள் (Beagle) இனத்தைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. 2 நாய்களின் உடல்களும் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கை வெளியான பின்னரே அவை உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

Kolkata Dog Cruelty: Man Kills Ex-Partner's Two Pet Dogs
Kolkata Dog Cruelty: Man Kills Ex-Partner's Two Pet DogsAI

இதற்கிடையே, புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஜாதவ்பூர் காவல் நிலைய போலீசார் சஞ்சிப்பை விசாரணைக்காக அழைத்துச் சென்று பின்னர் கைது செய்தனர். விலங்கு நல ஆர்வலர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, நாய்களைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரிநோவா, சஞ்சிப் தன்னைத் தொடர்ந்து உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார்.

"கடந்த 6 முதல் 7 மாதங்களாக கிட்டத்தட்ட தினமும் என்னை அடித்துத் துன்புறுத்தினார். வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறினேன். எல்லா வகையிலும் என்னைச் சித்திரவதை செய்தார். நான் அங்கேயே இருந்திருந்தால் என்னைக் கொன்றிருப்பார்" என்று ஊடங்கங்களுக்கு அளித்த பேட்டியில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

 மேலும், தனது சகோதரரைப் பொய் வழக்கில் சிக்க வைக்க சஞ்சிப் முயற்சி செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சஞ்சிப் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அதன் பின்னர் தனது சகோதரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காதல் முறிவைத் தொடர்ந்து இரண்டு வளர்ப்பு நாய்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவமும், அந்தப் பெண் முன்வைத்த குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளும் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Kolkata Dog Cruelty: Man Kills Ex-Partner's Two Pet Dogs
2002 குஜராத் கலவரம்!! நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானு வழக்கு.. 2 பேருக்கு ஆயுள் நிறுத்தி வைப்பு!!