\
நடுவானில் எரிபொருள் கசிவு: தப்பியது ஏர் இந்தியா விமானம்!

நடுவானில் எரிபொருள் கசிவு: தப்பியது ஏர் இந்தியா விமானம்!

நடுவானில் எரிபொருள் கசிவு: தப்பியது ஏர் இந்தியா விமானம்!
Published on

ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, எரிபொருள் கசிந்ததால் அவசரமாகத் தரையிறப்பட்டது.

பாங்காங்- டெல்லி இடையே ஏ1-335 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று இரவும் இந்த விமானம் பாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்தது. நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் எரிபொருள் கசிந்ததை விமானி கண்டுபிடித்தார்.

அப்போது விமானம் கொல்கத்தா, வான் எல்லையின் அருகில் பறந்துகொண்டிருந்தது. இந்த தகவல் அந்த விமான நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக எரிவாயு கசிவு, சரி செய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com