ராமநவமி கொண்டாட்டம்: கொல்கத்தாவில் நடைபெறவிருந்த KKR vs RR போட்டி தேதி மாற்றம்

ராமநவமியை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல். போட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
KKR vs RR
KKR vs RRpt desk

வரும் 17 ஆம் தேதி ராமநவமி கொண்டாடப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் மிக விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படும் என்பதால், அன்றைய தினம் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி முந்தைய நாளான 16 ஆம் தேதி கொல்கத்தாவில் நடத்தப்படும் என ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

KKR vs RR
“இதனால்தான் ரோகித்துக்கு இவ்ளோ Fans..” - ஹர்திக்கிற்கு ஆதரவாக Heart Touching செயல்! வைரல் வீடியோ!
LSG vs RR
LSG vs RRX

முன்னதாக நேற்று முன்தினம் "ஏப்ரல் 17ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியானது, அன்றைய நாளில் கொண்டாடப்படும் ராமநவமியால் தேதி மாற்றப்படவிருக்கிறது.

நாடுமுழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையால் பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் இருப்பதாக நிர்வாகத்திடம் கொல்கத்தா காவல்துறை தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் தொடங்கவிருப்பதும் காரணமாக கூறப்படுகிறது” என்று 'Cricbuzz' செய்தி வெளியிட்டிருந்தது.

KKR vs RR
'ராமநவமி' காரணமாக KKR vs RR மோதும் IPL போட்டி இடமாற்றம்? ஆலோசனையில் ஈடுபட்டுவரும் பிசிசிஐ! விவரம்!

அதுபோலவே தற்போது ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்னொருபக்கம், இதேதினத்தில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டி 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com