\
மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் பதவிக்காலம் நீட்டிப்பு

மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் பதவிக்காலம் நீட்டிப்பு

மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் பதவிக்காலம் நீட்டிப்பு
Published on

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. வரும் 30-ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான வேணுகோபால் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தலைமை வழக்கறிஞராக வேணுகோபால் நியமிக்கப்பட்டார். ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசுக்காக வேணுகோபால் ஆஜராகி வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com