‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி

‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி

‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
Published on

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்கியுள்ளனர். 

விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, நில உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவான அகில இந்திய கிஷான் சபா சார்பில் நடைபெறும் இந்தப் பேரணி நாசிக்கில் நேற்று தொடங்கியது.  

நதிநீர் இணைப்பு திட்டம், சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு பென்சன் திட்டம், பழங்குடியின மக்களுக்கு வனப் பகுதிகளை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி நடைபெறும் இந்தப் போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

முன்னதாக, புதன்கிழமையே இந்தப் பேரணி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஒருநாள் தள்ளிப் போனது. அதேபோல், மகராஷ்டிர அரசுடன் புதன்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து போராட்டம் தொடங்கியுள்ளது. 

“முதல்வருடன் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் மகாராஜன் தெரிவித்தார். இருப்பினும், எங்களது பேரணியை தொடங்குவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும்” என்று விவசாய சங்க தலைவர் அசோக் தவாலே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் விவசாயிகள் மாபெரும் நடைப் பயண பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பேரணி மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com